சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், கல்வி உதவித்தொகைகள் மற்றும் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மூலம் கல்வி அதிகாரமளித்தலை வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 7:15PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர், சீர்மரபினர் சமூகத்தினருக்கு கல்வியில் சமமான அணுகலை வலுப்படுத்துவதற்கான இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் கூறுகையில், கல்வி உதவித்தொகைகள், குடியிருப்பு உள்கட்டமைப்பு, வெளிநாட்டுக் கல்வி உதவி, ஆய்வு உதவித்தொகைகள், பயிற்சி முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் மூலம், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தினரின் கல்வித் தொடர்ச்சியை ஆதரிப்பதுடன், அவர்களுக்கான நிதித் தடைகளையும் இத்துறை குறைத்து வருகிறது என்று தெரிவித்தார்.

தரமான கல்வி நிறுவனங்களை அணுகும் வாய்ப்பை மேம்படுத்துவதும், கல்வியின் பல்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும் இந்த முயற்சிகளின் நோக்கம் என்று திரு பந்த் கூறினார். வெளிப்படையான கல்வி உதவித்தொகை வழங்கல், பயனாளிகளின் தகுதி நிலையை உறுதிசெய்தல், நேரடிப் பலன் பரிவர்த்தனை வசதி கொண்ட அமைப்புமுறைகள் ஆகியவற்றிற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310227&reg=48&lang=2

***

TV/BR/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311584) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी