நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பான மனுக்களில் நிலுவையில்லா நிலை எட்டப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 5:37PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை , அரசு அலுவலகங்களில் தூய்மை மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ், 2025 நவம்பர்  முதல் 2026 ஆகஸ்ட்  வரை நிலுவையில் இருந்த பொதுமக்களின் குறைகள் மற்றும் மேல்முறையீடுகள், அமைச்சகங்களுக்கு இடையிலான குறிப்புகள், பிரதமர் அலுவலகம் தொடர்பான குறிப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுதிமொழிகள் ஆகியவற்றை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பயனாக, தற்போது முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் பிரதமர் அலுவலகக் குறிப்புகள் எதுவும் நிலுவையில் இல்லை.

அலுவலகத் தூய்மையை மேம்படுத்தும் வகையில் கழிப்பறைகளில்  சென்சார்கள் பொருத்தப்பட்டன. பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இல்லாத ஒரு வாகனம் அகற்றப்பட்டதால், அலுவலக வளாகத்தில் கூடுதல் இடம் கிடைத்து, வாகன நிறுத்துமிடத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த முடிந்தது. மேலும், 2026 ஜனவரி மாதத்தில் தூய்மை இருவார விழா நடத்தப்பட்டு, அதிகாரிகளிடையே தூய்மை மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மூலம் அலுவலகத் தூய்மை, இடப்பயன்பாடு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 6.0-லும் தூய்மை மற்றும் நிலுவைப் பணிகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை தயாராகி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310949&reg=3&lang=1

***

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311517) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी