பிரதமர் அலுவலகம்
பிரதமர் தமக்கு அளித்த அன்பு, ஆசீர்வாதத்திற்காக நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 11:31AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தம்முடையப் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதிலுமிருந்து அளித்த அன்பு, ஆசீர்வாதத்திற்காகத் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். சில அன்பின் வெளிப்பாடு மிகவும் சிறப்பானது என்றும் மனதை ஈர்ப்பதாக அமைந்துள்ளது என்றும் திரு மோடி கூறியுள்ளார். அது போன்ற அன்பான வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஆசீர்வாதத்தின் ஒளி நிகழ்வு என்றும் இது தம்மைப் பெரிதும் ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆசீர்வாதமும் இந்திய மக்களுக்கு மேலும் சிறந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கான தனது உறுதியை வலுப்படுத்துவதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
சில அன்பின் வெளிப்பாடுகள் மிகவும் சிறப்பானது!
அது போன்ற அன்பான வெளிப்பாடுகளில் ஒன்றான ஆசீர்வாதத்தின் ஒளி நிகழ்வு என்னைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆசீர்வாதமும் இந்திய மக்களுக்கு மேலும் சிறந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கான எனது உறுதியை வலுப்படுத்துகிறது.
***
(Release ID: 2311201)
TV/IR/GS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311344)
வருகையாளர் எண்ணிக்கை : 8