பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ராஜஸ்தான் ஏகலவ்யா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளில் கணினி ஆய்வகம், நவீன வகுப்பறைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 6:27PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 29 ஏகலவ்யா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த கணினி ஆய்வகம், நவீன வகுப்பறை வசதிகளை அமைப்பதற்காக, தேசிய பழங்குடியினர் நிதி, மேம்பாட்டுக் கழகம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்ம் கையெழுத்தாக்கியுள்ளது.
மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா, இணைச் செயலாளரும், தேசிய பழங்குடியினர் நிதி, மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு டி. ரூமுவான் பைட்டே, துணைச் செயலாளர் திரு கணேஷ் நாகராஜன் மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் ரூ 16.01 கோடி மதிப்பிலான இத்திட்டம், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310584®=3&lang=1
***
TV/SV/RJ/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311261)
வருகையாளர் எண்ணிக்கை : 22