சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்எஃப்எஸ்சி உதவித் தொகையால் உயர்ந்த மிதிலா ராதாகிருஷ்ணனின் கல்விப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 5:11PM by PIB Chennai

பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகையான என்எஃப்எஸ்சி திட்டம், நிதித் தடைகளை நீக்குவதன் மூலம், முனைவர் பட்டக் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வழிவகை செய்கிறது.

மிதிலா ராதாகிருஷ்ணனின் பயணம், இந்த ஆய்வு உதவித்தொகையால் வலுவடைந்தது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான மாணவி திருமதி மிதிலா ராதாகிருஷ்ணன், என்எஃப்எஸ்சி-யின் ஆதரவுடன் தனது முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்கிறார்.

தற்போது தனது முனைவர் பட்டப் படிப்பின் நான்காம் ஆண்டில் பயிலும் அவர், நான்கு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியபோது, ​​ஆராய்ச்சி மீதான அவரது ஆர்வம் வளர்ந்தது. மாணவர்களுக்கு வழிகாட்டிய அவர், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், திட்டப்பணிகளுக்கு மேலும் திறம்பட ஆதரவளிக்கவும் தனது ஆராய்ச்சி அறிவை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். இந்த அனுபவமே அவரை முனைவர் பட்டப் படிப்பைத் தொடரத் தூண்டியது.

இருப்பினும், இந்த லட்சியத்தை நனவாக்க நிதி உதவி தேவைப்பட்டது.  அவருடைய கல்லூரிச் சம்பளம் போதுமானதாக இல்லை.

2020-ல் என்எஃப்எஸ்சி ஆய்வு உதவித்தொகை அவருக்குக் கிடைத்தது. மிதிலா 2022-ல் தனது முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார்.

ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் தடைகளைத் தாண்டி, முனைவர் பட்டக் கல்வியைத் தொடரவும் உதவித் தொகை உதவுகிறது என்பதை மிதிலா ராதாகிருஷ்ணனின் பயணம் விளக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310101&reg=48&lang=2

***

TV/PLM/GS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311232) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada