குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 7:54PM by PIB Chennai
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே, கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் அமைந்துள்ள தொழில்நுட்ப மையத்தை இன்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகம், கர்நாடக அரசின் மூத்த அதிகாரிகள், தொழில் துறைப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "இந்த மையம், பயிற்சி, உற்பத்தி மற்றும் இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு மையமாகத் திகழும். எம்எஸ்எம்இ அமைச்சகத்தால் இயக்கப்படும் தொழில்நுட்ப மையங்களின் வலையமைப்பு, இளம் தலைமுறையினரின் திறனை வளர்ப்பதிலும் அவர்களுக்குத் தொழில் சார்ந்த திறன்களை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது," என்று கூறினார். மேலும், கர்நாடகாவின் பெலகாவியில் ரூ. 178 கோடி செலவில் அடுத்த தொழில்நுட்ப மையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
தொழில்முனைவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், மாணவர்களும், இளம் கண்டுபிடிப்பாளர்களும், புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடைவதில் பங்களிக்கும் வகையில், மாணவர்களின் கல்வி, பயிற்சி, திறன் மேம்பாட்டில் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308891®=3&lang=1
***
TV/RB/RJ