தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜார்க்கண்டில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 4:35PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநில கிராமப்புறங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராட்பேண்ட் இணைப்பை விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் டிஜிட்டல் பாரத் நிதி அமைப்பு, மாநிலத்தில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (10.09.2026) புது தில்லியில் உள்ள சஞ்சார் பவனில் கையெழுத்தானது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, டிஜிட்டல் பாரத் நிதி, ஜார்க்கண்ட் அரசு; ஜார்க்கண்ட் டிஜிட்டல் உள்கட்டமைப்பு கழகம் லிமிடெட், பிஎஸ்என்எல், ஜார்க்கண்ட் கம்யூனிகேஷன் நெட்வொர்க் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, கிராமப்புற டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் மத்திய அரசு, ஜார்க்கண்ட் அரசின் ஆகியவற்றின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308726®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310778)
வருகையாளர் எண்ணிக்கை : 9