சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளம் சாதனையாளருக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டம் – 1.18 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 4:44PM by PIB Chennai

இளம் சாதனையாளருக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டம் (ஷ்ரேயஸ்)மூலம் எஸ்சி, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

2014-15-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இத்திட்டத்தின் 4 முக்கிய பிரிவுகளின் கீழ் சுமார் 3509.39 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கூறியுள்ளார். இதன் மூலம், மொத்தம் 1,18,248 பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி சிக்கல்களை குறைப்பதையும், கல்வி மற்றும் தொழில்சார்ந்த வாய்ப்புகளையும் பெறுவதற்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை இத்திட்டம் ஒருங்கிணைப்பதாக அமைச்சர் கூறினார். போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி, முன்னணி கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நிதியுதவி, வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வதற்கான ஆதரவு, மேம்பட்ட ஆராய்ச்சிக்கான உதவித்தொகை ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்று தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகள், தொழில்சார்ந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய எஸ்சி, ஓபிசி மாணவர்களுக்கு தரமான பயிற்சிக்கான நிதியுதவியை கட்டணமில்லா பயிற்சி முறை அளிப்பதாக டாக்டர் வீரேந்திர குமார் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310474&reg=3&lang=1

***

TV/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310668) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी