சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தூய்மைப் பணி தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் தூய்மைப்பணியாளர்களுக்கு கண்ணியமிக்க வாழ்வு உறுதிசெய்யப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 4:20PM by PIB Chennai
பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த வருவாய், சமூக புறக்கணிப்பு, கல்வி வாய்ப்புகளின்மை ஆகியவை பாதுகாப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கு தடையாக உள்ளன. உரிய நேரத்தில் அளிக்கப்படும் நிதியுதவி, இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார பராமரிப்பு உபகரணங்களுக்கான அணுகல் ஆகியவை இது போன்ற சவாலான வாழ்வாதாரங்களை பாதுகாப்பான, நிலையான வருவாய் ஆதாரங்களாக மாற்ற உதவும்.
நமஸ்தே திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணி தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆதரவின் பயனை நிரூபிக்கும் வகையில், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 30 வயதான திரு பாலமலா மல்லி, சிறந்த பொருளாதார ஸ்திரத் தன்மையையும், கண்ணியத்தையும் நோக்கி முன்னேறியுள்ளார். 5 பேர் கொண்ட குழுத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெட்டிங், கிராபிலிங், ராடிங் ஆகிய இயந்திரங்களை வாங்குவதற்கான உதவியை அவர் பெற்றார். இது அவருக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் வாழ்வாதாரத்தில் கூடுதல் வாய்ப்பை உருவாக்கியது.
இவர், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள குண்டூர் மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக கழிவு சேகரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310452®=3&lang=1
***
TV/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310667)
வருகையாளர் எண்ணிக்கை : 6