சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வாரணாசியின் வளர்ச்சிக்காக ரூ.10,998 கோடியில் அமைக்கப்படும் புதிய சாலை
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 12:29PM by PIB Chennai
பிரசித்திபெற்ற வாரணாசியின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கும் வருணா ஆறு வழித்தடத்தில் ரூ.10,998 கோடியில் புதிய சாலை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. வாரணாசியை முக்கியப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படும் இந்த சாலையால், வாரணாசி, புல்வாரியா உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
வாரணாசியில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம், ராம்நகர் துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், வருணா வழித்தடம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள், நடைபாதை, சரக்கு வாகனங்களுக்கான வசதிகள் இடம்பெற்றுள்ள இந்த சாலையின் மூலம் வாரணாசிக்கு செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும்.
புதிய சாலை மூலம் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்பெறுவார்கள். கலாச்சாரம், ஆன்மீக சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற வாரணாசியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். வருணா சாலை திட்டத்தின் மூலம் வாரணாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310354®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310630)
வருகையாளர் எண்ணிக்கை : 13