சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முறையான கவுன்சிலிங், மருத்துவச் சிகிச்சை மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த மகாராஷ்டிரா மாநில இளைஞர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 2:58PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ்.எம் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). போதைப் பழக்கம், மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவை சந்தித்தார். இந்நிலையில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ச்சியான கவுன்சிலிங், போதை தடுப்பு சிகிச்சை, இலவச உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதன் காரணமாக தேவ் தனது பழயை நிலையை அடைந்தார். தனது குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினருடன் சுமூகமான உறவை தொடர்ந்தார். உடல்நிலை மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் அடைந்தார். இதுகுறித்து பேசிய தேவ், போதை மறுவாழ்வு மையத்தில் அளிக்கப்பட்ட கவுன்சிலிங், மருத்துவ சிகிச்சை, முறையான கண்காணிப்பு ஆகியவற்றால் தனது மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினார். குடும்ப உறுப்பினருடன் சகஜமாக பழகி வருவதாகவும், வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.  உடல்நலத்தை மட்டுமின்றி வாழ்வாதரத்தையே சிதைக்கும் போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு தனது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310405&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310623) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada