அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாடு முழுவதுமுள்ள வானியலாளர்கள் நான்காவது எச்டிஎஸ்ஆர் நட்சத்திர நிகழ்வில் பங்கேற்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 2:56PM by PIB Chennai

லடாக்கின் ஹான்லே-யில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் 2026 செப்டம்பர் 7 முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற நான்காவது ஹான்லே வான் உற்றுநோக்குதல் நட்சத்திர கண்காணிப்பு நிகழ்வில் நாடு முழுவதுமுள்ள நிபுணத்துவமிக்க வானியல் புகைப்பட கலைஞர்களும், துறைசார்பற்ற வானியலாளர்களும் பங்கேற்றனர்.

அறிவியல் ஆராய்ச்சி, பொதுமக்களின் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் மாசுபடாத இருண்ட வானத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதில் இந்த நிகழ்வு பங்களிக்கிறது. இதில் நாடு முழுவதுமுள்ள  துறைசார்பற்ற வானியலாளர்களும், வானியல் புகைப்பட கலைஞர்களின் உற்சாகமான பங்கேற்பும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதாக இந்திய வான் இயற்பியல் நிறுவன இயக்குநர் பேராசிரியர் அன்னபூரணி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சண்டிகர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடாகா, மகாராஷ்டிரா, புதுதில்லி, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40 துறைச்சாராத வானியலாளர்கள் பற்கேற்றனர். இந்நிகழ்வில் ஹான்லேவில் நான்கு இரவுகள் தங்கியிருந்து இந்த நிகழ்வில் ஈடுபட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310404&reg=3&lang=1

***

TV/IR/PS/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2310603) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Bengali , Bengali-TR