புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆகஸ்ட் 2026-க்கான நுகர்வோர் விலைக் குறியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 4:00PM by PIB Chennai

ஆகஸ்ட் 2026-ல் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம் 4.82% ஆகும்.

நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில், ஆகஸ்ட் 2026-ல் ஆண்டு உணவுப் பணவீக்கம் 5.95% ஆகும்.

முக்கிய புள்ளிவிவரங்கள்:

தேசிய அளவிலான குறியீடுகள்:

2024-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 2026-க்கான ஆண்டு பணவீக்க விகிதம் 4.82% (தற்காலிகம்) ஆகும். கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான தொடர்புடைய பணவீக்க விகிதங்கள் முறையே 5.23%, 4.31% ஆகும்.

உணவுப் பணவீக்கம்:  அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 2026-க்கான ஆண்டு பணவீக்க விகிதம் 5.95% (தற்காலிகம்) ஆகும். கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான தொடர்புடைய பணவீக்க விகிதங்கள் முறையே 6.13%, 5.64% ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310058&reg=48&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2310498) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi