சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு நிலையான எதிர்காலத்தை நோக்கிய மிருணாஸின் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 4:16PM by PIB Chennai
எளிதில் அணுகக்கூடிய சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு ஆதரவு ஆகியவை போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவும். போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ், அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள கோசெஹ்டாவின் மாவட்ட போதைப்பொருள் மீட்பு மையம் மூலம் வழங்கப்பட்ட உதவியானது, மிருணாஸ் என்பவரின் மீட்சிக்கும், அவர் நிலைத்தன்மையை நோக்கி முன்னேறுவதற்கும் துணைபுரிந்தது.
அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 26 வயதான மிருனாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்வதற்கும், தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், நிதிச் சுதந்திரத்தை நோக்கி நகர்வதற்கும் அவருக்கு போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டம் உதவியுள்ளது.
அவரது குழந்தைப் பருவம், கடினமான குடும்பச் சூழ்நிலைகளால் நிறைந்திருந்தது. சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தது, அவரது வீட்டுச் சூழலைச் சீர்குலைத்து, கல்வியைத் தொடரவிடாமல் தடுத்தது. அவர் தனது 11-வது வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
31 ஆகஸ்ட் 2025 அன்று, அவர் போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ், ஜோர்ஹட்டிலுள்ள மையத்தின் ஆதரவைப் பெற்றார். அந்த உதவியானது, போதைப்பொருள் சார்புநிலையைச் சமாளித்துத் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க அவருக்கு உதவியது. சிகிச்சைத் திட்டம், ஆலோசனை சேவைகள், மறுவாழ்வு ஆதரவு ஆகியவற்றை அது உள்ளடக்கியிருந்தது.
இது மிருணாஸ் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து, நிலைத்தன்மையை நோக்கி நகர உதவியது. இப்போது, மிருணாஸ் ஒரு நிறுவனத்தில் முழுநேர ஊழியராக இருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310074®=48&lang=1
(Release ID: 2310074)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310236)
வருகையாளர் எண்ணிக்கை : 8