அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி, விநியோக நாடாக இந்தியா திகழ்கிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 3:23PM by PIB Chennai

கடந்த சில ஆண்டுகளில், இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும், அளவின் அடிப்படையில் உலகின் பெரிய விநியோகஸ்தராகவும் உருவெடுத்துள்ளது என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில், உயிரி தொழில்நுட்பத் துறை நடத்திய, தொற்றுநோய் தயார்நிலைக்கான புத்தாக்கக் கூட்டமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

இந்தியாவின் பன்முக நோய்ச் சூழலும், அதன் விரிவடைந்து வரும் அறிவியல் திறன்களும் இணைந்து, தடுப்பூசி ஆராய்ச்சியில் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா, ஒரு துடிப்பான உயிரிப் பொருளாதாரத்தையும், வலுவான தடுப்பூசி மேம்பாட்டுத் திறன்களையும் கட்டமைத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். மலிவு விலையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் முதன்மையாக அறியப்பட்ட இந்தியா, ஆராய்ச்சி, புத்தாக்கம் முதல் மேம்பட்ட உயிரி மருந்து உருவாக்கம் வரை திறன்களை வளர்த்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309719&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309827) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी