விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல் நினோ ஆண்டில் சிஏஇசட்ஆர்ஐ-யின் மோத் பீன் ரகங்கள் குறிப்பிடத்தக்க மீள்திறனை வெளிப்படுத்துகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 1:40PM by PIB Chennai

மேற்கு ராஜஸ்தானின் வெப்பமான வறண்ட பகுதிகளின் மிக முக்கியமான பயறு வகைப் பயிர்களில் ஒன்றான மொச்சை, சுமார் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இருப்பினும், 150-250 மில்லி மீட்டர் வரையிலான குறைவான, சீரற்ற மற்றும் நிச்சயமற்ற மழைப்பொழிவு, 20-30 நாட்கள் நீடிக்கும் நீண்ட வறண்ட காலங்கள், மண்ணில் ஈரப்பதம் குறைவாகக் கிடைப்பது போன்ற காரணங்களால், இதன் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 350 கிலோ என்ற அளவில் குறைவாகவே உள்ளது. இத்தகைய சவாலான சூழ்நிலைகளில், ஒரு பயிர் ரகம் ஈரப்பதம் பற்றாக்குறையைத் தாங்கி, வளர்ச்சியைத் தக்கவைத்து, இனப்பெருக்க வளர்ச்சியைத் தொடரும் திறன் கொண்டிருப்பது, பயிர் உற்பத்தியை நிலைநிறுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஜோத்பூரில் உள்ள ஐசிஏஆர்மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனமான சிஏஇசட்ஆர்ஐ (CAZRI), வறண்ட பிராந்தியத்தின் கடுமையான நிலைமைகளுக்கு ஏற்ற, ரகங்களை உருவாக்கும் நோக்கில், நீண்டகால நரிப்பயறு எனப்படும் மோத் பீன் ரக மரபணு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில், நான்கு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போதைய எல் நினோ ஆண்டில் (கரீஃப் 2026), குறிப்பாக சுமார் 35 நாட்கள் நீடித்த ஈரப்பதம் குறைந்த காலகட்டத்தில், அவற்றின் செயல்திறன் குறிப்பிடத்தக்க கள அளவிலான தாங்குதிறனை வெளிப்படுத்தியுள்ளது.

வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் செயலாளரும், ஐசிஏஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் எம்.எல். ஜாட், 2047-ம் ஆண்டுக்குள் தார் பாலைவனத்தை மேலும் வளமாக்குவதிலும், விவசாயிகள் தன்னிறைவு அடைய புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும் சிஏஇண்ட்ஆர்ஐ-யின் (CAZRI) நரிப்பயறு (மோத் பீன்) ரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று கூறினார். நீண்ட காலம் மழையின்றி இருக்கும்போதும், இந்த ரகங்கள் தங்கள் வளர்ச்சியையும் காய்களின் வளர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருப்பது, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309690&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309825) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी