பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறைச் செயலாளர், வியட்நாம் பாதுகாப்புத் துறை துணை அமைச்சருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 1:54PM by PIB Chennai

இந்திய - வியட்நாம் பிரதமர்களுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து, தற்போது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், வியட்நாமின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் நுயென் ட்ரூங் தாங்க்- இன்று (2026 செப்டம்பர் 13) புது தில்லியில் சந்தித்தார். நட்புறவை வலுப்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்

கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பப் பகிர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அமைதியான, நிலையான, விதிகள் அடிப்படையிலான பிராந்தியப் பாதுகாப்புக் கட்டமைப்பை உறுதி செய்வதற்காக, கடல்சார் உறவுகளை விரிவுபடுத்துவதில் தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

சிக்கலான பாதுகாப்புச் சூழல்களைக் கையாள்வதற்கு, பலதரப்பு மன்றங்களில் நெருங்கிய ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவும் வியட்நாமும் வலுவாக வலியுறுத்தின. ஆசியான் தலைமையிலான வழிமுறைகள் மூலம் நடைமுறைப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்களது கூட்டு உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309693&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309790) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी