சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து முனைவர் பட்ட சாதனை வரை: மோனியாவின் சாதனைப் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 12:54PM by PIB Chennai
மோனியாவைப் பொறுத்தவரை, முனைவர் பட்டம் பெறுவது என்பது பொருளாதாரச் சிக்கல்களைக் கடந்து, தன் குடும்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெறுவதாகும். பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கிடைத்த ஆதரவு, அவரது ஆராய்ச்சியைத் தொடரவும் இந்த மைல்கல்லை அடையவும் உதவியது.
ஹரியானாவின் குருக்ஷேத்ராவைச் சேர்ந்த 29 வயதான ஆய்வாளர் டாக்டர் மோனியா, உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உதவியுடன் தனது முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். நிதிச் சிக்கல்களுக்கு மத்தியிலும் அவர் காட்டிய விடாமுயற்சியையும், முனைவர் பட்ட ஆய்வைத் தொடர உதவித்தொகையின் பங்கையும் அவரது இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது.
விஞ்ஞானியாக வேண்டும் என்ற பேராவலுடனும், நானோ-உயிரித் தொழில்நுட்பத்தில் புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடனும், டாக்டர் மோனியா உயர்கல்வியைத் தொடரத் தீர்மானித்திருந்தார். இருப்பினும், அவரது முனைவர் பட்டப் படிப்பை ஆதரிப்பதற்கு அவரது குடும்பத்திடம் போதுமான நிதி வசதி இல்லை. ஆராய்ச்சிச் செலவுகள் அவருக்குக் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினரிடையே கவலையையும் உண்டாக்கின.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், அவர் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்வதற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார். என்எஃப்எஸ்சி உதவித் தொகை மார்ச் 2022-ல் அவருக்கு கிடைக்கத் தொடங்கியது. இதன் மூலம் ₹10 லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பெற்றார். இந்த ஆதரவு, அவரது எதிர்கால கல்வி, தொழில்முறை லட்சியங்களுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309682®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309775)
வருகையாளர் எண்ணிக்கை : 17