சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை வலுப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 12:31PM by PIB Chennai
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு ஆதரவு, கண்ணியமான வாழ்வு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், பராமரிப்பை விரிவுபடுத்துதல், அத்தியாவசிய சேவைகளை வழங்குதல், முதியவர்களுக்கு உதவியளிக்கும் வாழ்க்கைச் சாதனங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
இதுகுறித்து, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் கூறுகையில், 2.88 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்குமிடம், சத்தான உணவு, சுகாதார சேவைகள், பிசியோதெரபி, பொழுதுபோக்கு, பிற அத்தியாவசிய ஆதரவு வசதிகள் மூலம் பயனடைந்துள்ளனர் என்றார். இந்தச் சேவைகள் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் உடல் நலத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 142 புதிய மூத்த குடிமக்கள் இல்லங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கூடுதல் இல்லங்கள் முதியோருக்கான பராமரிப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
தற்சார்பு வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, 4.91 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளை உள்ளடக்கி 228 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதே வேளையில் சுமார் 23.93 லட்சம் இலவச உதவி சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறினார். மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன என்று செயலாளர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309671®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309769)
வருகையாளர் எண்ணிக்கை : 12