சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் வலுப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 12:14PM by PIB Chennai
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காகவும் கண்ணியத்திற்காகவும், பணியாளர் விவரச் சேகரிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், சுகாதாரக் காப்பீட்டு வசதி, நிதியுதவி, பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதுகுறித்து சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் கூறுகையில், மொத்தம் 90,942 செப்டிக் டேங்க் தொழிலாளர்கள், விவரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 89,248 பேர் சரிபார்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், 87,037 தொழிலாளர்களுக்குத் தனிநபர் பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அதே சமயம், பாதுகாப்பான பணிச்சூழலுக்காக பல்வேறு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் 76,247 தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
துப்புரவு வாகனங்களைப் பெறுவதை எளிதாக்கும் வகையில், 364 வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்காக 983 துப்புரவுப் பணியாளர்களுக்கு ₹34.17 கோடி முன்பண மூலதன மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று செயலாளர் தெரிவித்தார். இந்த உதவியானது இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிகளுக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகளுக்கும் ஆதரவளிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
தூய்மைப் பணியாளர்களின் கண்ணியத்தைப் பேண அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன என்று திரு பந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309666®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309763)
வருகையாளர் எண்ணிக்கை : 11