பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

“அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய ஆளுகையையும் பன்முகத்தன்மையையும் வலுப்படுத்துதல்” குறித்த பிரிக்ஸ் அமர்வுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 10:48AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நேற்று (2026 செப்டம்பர் 12) புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, “அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய ஆளுகையையும் பன்முகத்தன்மையையும் வலுப்படுத்துதல்” குறித்த பிரிக்ஸ் அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

2. தமது உரையில் பிரதமர் பின்வருவனவற்றை வலியுறுத்தினார்:

i. சர்வதேச தென் பகுதி நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதில் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் முடிவெடுப்பதில் பின் வரிசையில் இருக்கின்றன. நாம் சிறப்புரிமைப்யை ஒத்துழைப்புக்கான ஒரு தளமாக மாற்ற வேண்டும்.

ii. உலகளாவிய ஆளுகையானது இன்றைய யதார்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; குறிப்பாக ஐநா. பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களில் அதிக பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.

iii. உலகத் தெற்கு நாடுகள் விதிகளைப் பின்பற்றும் நிலையில் இருந்து விதிகளை உருவாக்கும் நிலைக்கு மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு மூலம், உலகத் தென் பகுதி நாடுகளைச் சேர்ந்த இளம் தூதர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பேச்சுவார்த்தைத் திறன்கள், நடைமுறைப் பயிற்சி, சட்ட நிபுணத்துவம் ஆகியவற்றை நம்மால் வழங்க முடியும்.

iv. மாலுமிகள் உலக வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். ஆயினும் நெருக்கடி காலங்களில் அவர்களுக்குப் போதுமான ஆதரவு பெரும்பாலும் கிடைப்பதில்லை. எனவே, மாலுமிகளுக்கான அவசரகால ஆதரவு கட்டமைப்பு ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டது.

3. நமது எதிர்காலம் பகிரப்பட்டது என்பதால், அந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமை பகிரப்பட வேண்டும். அதாவது குரல் கொடுப்பதில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வரை, சிறப்புரிமையில் இருந்து ஒத்துழைப்பு வரை பகிரப்பட வேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். பிரதமரின் உரையை இந்த இணைப்பில் காணலாம்: https://www.mea.gov.in/Speeches-Statements?dtl/41775

4. பிரிக்ஸ் ஒத்துழைப்பின் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகள், அர்ப்பணிப்பு, அதன் தன்மையை நிர்ணயிக்கும் புது தில்லி பிரிக்ஸ் தலைவர்கள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அமர்வு நிறைவடைந்தது. அந்தப் பிரகடனத்தை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://www.mea.gov.in/bilateral-documents?dtl/41776

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309642&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309672) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam