அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்கு அரிய கனிமங்கள் இன்றியமையாதவை : மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 3:53PM by PIB Chennai
இந்தியா வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தனக்கென ஒரு உலகளாவிய பங்கை வடிவமைப்பதில் இப்போது நம்பிக்கையுடன் உள்ளது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்துறைப் போட்டித்திறன், தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அரிய கனிமங்கள் இன்றியமையாதவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் (சிஐஐ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அரிய கனிமங்கள், உலோகங்கள் குறித்த 3-வது உலகளாவிய உச்சிமாநாட்டின் சிறப்புப் பொது அமர்வில் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (11.09.2026) உரையாற்றினார்.
தூய்மையான எரிசக்தி, மின்சார வாகனப் போக்குவரத்து, செமிகண்டக்டர்கள், தொலைத்தொடர்பு, விண்வெளி, பாதுகாப்பு, அணுசக்தி ஆகியவை தொழில்துறை மாற்றத்தின் முக்கிய உந்து சக்திகளாக உருவெடுத்து வருவதால், உலகப் பொருளாதாரம் ஒரு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியா இப்போது இவற்றில் மிகுந்த நம்பிக்கையுடன் பங்கேற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா தனது உள்நாட்டு தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், உலகளாவிய உத்திகளையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் பின்பற்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா தனது தொழில்நுட்பப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நாட்டின் தொழில்நுட்பப் பயணமானது, அரசு, தொழில்துறை, ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் இணைந்து செயல்படுவதைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309144®=3&lang=1
(Release ID: 2309144)
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309439)
வருகையாளர் எண்ணிக்கை : 5