ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வறண்ட நிலங்களை மறுவடிவமைப்பதற்கான நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 4:27PM by PIB Chennai

நாட்டில் உள்ள வறண்ட நிலங்களை மறுவடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கான மாநாடு புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றி மத்திய நீர்வளத் துறை செயலாளர் திரு நரேந்திர பூஷன் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலப்பரப்புகளை ஒருங்கிணைந்த நீர்பிடிப்பு பகுதி மேம்பாடு, தொழில்நுட்பம், சமூக பங்கேற்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

செப்டம்பர் 10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் வறண்ட நில மேலாண்மைக்கான எதிர்காலம் குறித்த விவாதத்திற்கான தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வறண்ட நில வேளாண் அமைப்புக்களை உருவாக்குவது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் 25 நாடுகளுக்கும் மேற்பட்ட 800-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் உரையாற்றிய மத்திய நீர்வளத் துறை செயலாளர் திரு நரேந்திர பூஷன் வறண்ட நிலங்கள் தரிசு நிலங்கள் அல்ல என்றும் பருவநிலை மாறுபாடுகள் காரணமாக அவற்றின் செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் உற்பத்தி திறன் கொண்ட நிலப்பகுதிகளாக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் மழை நீரை அடிப்படையாக் கொண்ட வேளாண் சாகுபடி 61.39 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது நாட்டின் மொத்த உணவு உற்பத்தியில் 40 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதாகவும் திரு பூஷன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309155&reg=3&lang=1

****

TV/SV/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309321) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी