சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துப்புரவு பணியாளர் நிலையிலிருந்து தொழில்முனைவோராக உருவெடுக்க வகை செய்யும் நமஸ்தே திட்டத்தின் கீழ் அஜய் குமாரின் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 5:10PM by PIB Chennai

நிதியுதவி, எந்திரமயமாக்கல், மனஉறுதி ஆகியவை பல ஆண்டுகால நடைமுறை சார்ந்த அனுபவங்களை நிலையான வாழ்வாதாரமாக மாற்றுவதற்கான வலிமைக் கொண்டவை. உத்தரப்பிரதேச மாநிலம் காஷியாபாத் பகுதியைச் சேர்ந்த துப்புரவு பணியாளரான திரு அஜய் குமார் சுகாதாரப் பணிகளை மேம்படுத்தி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள தூய்மை தொழில்முனைவோர் திட்டம் உதவிகரமாக அமைந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளரான திரு அஜய் குமார் தனது பணிகளை எந்திரமயமாக்கியுள்ளார். இந்த திட்டத்திக் கீழ் ரூ.30,000 முதல் 35,000 வரை மாத வருவாய் ஈட்டுவதற்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் அவரது மகள்களின் கல்விக்கும், தாயாரின் மருத்துவ தொடர் செலவுகளைச் சமாளிப்பதற்கும் உதவுகிறது.

குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் குடும்பத்தின் வருமானத்திற்காக துப்புரவு பணியை மேற்கொண்டு வந்தார். இதில் கிடைந்த அனுபவங்களை கொண்டு காஷியாபாத் மாநகராட்சியின் கீழ் எந்திரங்களின் உதவியுடன் துப்புரவு பணிகளை மேற்கொண்டு கூடுதல் வருவாய் ஈட்டிவருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309195&reg=3&lang=1

****

TV/SV/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309314) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी