பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைப் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 9:04AM by PIB Chennai

1893 செப்டம்பர் 11 அன்று சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

சுவாமி விவேகானந்தரின் மனதை கவர்ந்த அந்த உரை இந்திய நாகரீகம் சார்ந்த மாண்புகளுக்கான ஒரு கண்ணோட்டத்தை வழங்கியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்த அவரது உரை இன்றளவும் உலகம் முழுவதும் எதிரொலிப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

1893 செப்டம்பர் 11 அன்று சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய மனதை கவர்ந்த உரை இந்திய நாகரீகம் சார்ந்த மாண்புகள் குறித்து உலகம் அறிய செய்தது. அவரது உத்வேகமிக்க இந்த உரை உலகம் முழுவதும் இன்றளவும் எதிரொலிக்கிறது.

***

(Release ID: 2308996)

SS/SV/SM/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2309111) வருகையாளர் எண்ணிக்கை : 10