சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் காடு, மர வளங்களை மதிப்பிடுவது குறித்த பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 3:15PM by PIB Chennai

காடு, மர வளங்கள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்த தேசிய அளவிலான பயிலரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் புதுதில்லியில் இன்று நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்கும் கலந்துகொண்டார்.

காடு, மர வளங்களை மதிப்பிடுதல், கண்காணித்தல், நிர்வகித்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறைகளை ஆராய்வதற்காக மாநில வனத்துறைகள், அறிவியல் நிறுவனங்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரை இப்பயிலரங்கு ஒருங்கிணைத்தது. வன எல்லைகளை மின்னணுமயமாக்குதல், காடு மற்றும் மரங்களின் அடர்த்தி மதிப்பீடு, ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308673&reg=3&lang=1

***

TV/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2308986) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali