அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நோயாளிக்கு ஏற்ற பிரத்யேக எலும்பு இணைப்பு அறுவை சிகிச்சை முறை குறித்து முப்பரிமாண முறையில் அச்சிட்டு வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 11:53AM by PIB Chennai

உயர்தர மருத்துவத் தொழில்நுட்பத்தில், இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, இறக்குமதி செய்யப்படும் சுகாதாரப் பராமரிப்பு சார்ந்த உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் வகையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள செரமாட் தனியார் நிறுவனத்திற்கு, டிஜிட்டல் லைட் பிராசஸிங் டெக்னிக் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் அடிப்படையிலான உபகரணங்கள் மூலம், முப்பரிமாண முறையில் அச்சிடுவதற்கு, கால்சியம் பாஸ்பேட் அடிப்படையில்,  தரமான, தனிப்பயனாக்கப்பட்ட நோயாளிக்கு ஏற்ற பிரத்யேக ஒட்டுக்கள் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதியுதவி வழங்கியுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயோசெராமிக் பொருட்கள், முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மேம்பட்ட, நோயாளிக்கேற்ற பிரத்யேக எலும்பு ஒட்டுக்களை வணிகமயமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாடுகளுக்கு உயர் தரத்திலான இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களும் மாற்றாக, உள்நாட்டுத் தயாரிப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், பயோ-செராமிக்ஸ், மேம்பட்ட செராமிக்ஸ் துறைகளில் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வணிகமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பட்டியலில், எலும்பியல், அழகுசாதனப் பொருட்கள்,  தொழில்துறை ஆகிய பல்வேறு துறைகளில் பயன்படும் ஹைட்ராக்ஸி அபடைட், பீட்டா-டிரைகால்சியம் பாஸ்பேட், பைஃபேசிக் கால்சியம் பாஸ்பேட், பயோஆக்டிவ் கிளாஸ் போன்ற தொழில்நுட்பம் செறிந்த உயிரிப் பொருட்களும் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308145&reg=3&lang=1

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308497) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी