சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் பயன்பாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான ஆன்மீக வலிமை
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 5:50PM by PIB Chennai
போதைப்பொருள் பயன்பாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்முயற்சிகளை வலுப்படுத்தும் விதமாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை, நான்கு முக்கிய ஆன்மீக அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சகத்தின் மாநாட்டு அறையில், இன்று இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
அத்யாத்ம் விஞ்ஞான் சத்சங் கேந்திரா, சின்மயா மிஷன், திவ்ய ஜோதி ஜாக்ருதி சன்ஸ்தான், ஹரே கிருஷ்ணா இயக்கம் ஆகிய நான்கு ஆன்மீக அமைப்புக்களுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில், ஆன்மீக அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அமைச்சகத்துடன் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வரும் அமைப்புகளின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள், 34.42 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைய உதவியுள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308382®=3&lang=1
(Release ID: 2308382)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308483)
வருகையாளர் எண்ணிக்கை : 7