தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் மெயின்பூரில் பணி நிறைவடையாத பாலத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 4:43PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தின் மெயின்பூர் வட்டத்தில் உள்ள கம்பதாஅதன் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்குச் செல்ல பைரி ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளதுஇதற்காகப்பாதி பணியுடன் நின்ற பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறுகலானவழுக்கக்கூடிய இரும்பு ஏணியில் அவர்கள் ஏற வேண்டிய கட்டாயம் உள்ளதுபருவமழைக் காலத்தில் ஆழமற்ற இந்த ஆறு கடும் நீரோட்டத்துடன் பெருக்கெடுத்து ஓடும் ஆறாக மாறுவதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவல்கள் உண்மையாக இருக்குமேயானால்அவை மனித உரிமை மீறல் தொடர்பானதாகும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருதுகிறதுஎனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சத்தீஸ்கர் மாநில தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308315&reg=3&lang=1

***

SS/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308468) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी