அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு, கரிம மூலக்கூறுகளின் சுய-கூட்டமைப்பு, ஒரு புதிய வழியை உருவாக்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 5:02PM by PIB Chennai

இயற்கையாக நிகழும் அமினோ அமிலத்தை, ஒளி-உறிஞ்சும் கரிம மூலக்கூறுடன் ஒருங்கிணைக்கும் எளிமையான, சக்திவாய்ந்த உத்தி மூலம், முற்றிலும் உலோகம் இல்லாத கரிமப் பொருட்களைப் பயன்படுத்தி, சூரிய சக்தியில் இயக்கப்படும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை மேம்படுத்த முடியும்.

ஹைட்ரஜன் மிகவும் நம்பிக்கைக்குரிய தூய்மையான எரிசக்திகளில்  ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அதன் எரிப்பதன் மூலம் தண்ணீரை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக அமைகிறது.

பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான, நம்பகத்தன்மையுடன் கூடிய  முறைகளில் ஒன்றாக, சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் வாயுக்களாகப் பிரிக்கிறது. இருப்பினும், தற்போதுள்ள பெரும்பாலான ஃபோட்டோகேடலிஸ்ட்கள் கனிம செமிகண்டக்டர்கள் அல்லது விலைமதிப்பற்ற உலோகங்களைச் சார்ந்துள்ளன. அவை பெரும்பாலும் அதிக விலை கொண்டதாகவும், கடினமான உற்பத்தி நடைமுறைகளைக் கொண்டதாகவும், நீண்ட கால நிலைத்தன்மை குறித்த அச்சத்தை எழுப்புகின்றன.

திறமையான உலோகம் இல்லாத கரிம ஒளி வினையூக்கிகளை உருவாக்குவது மாபெரும் அறிவியல் ரீதியிலான சவாலாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308334&reg=3&lang=1

(Release ID: 2308334)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308458) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी