பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 4:51PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு புதுதில்லியில் இன்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்.
அப்போது வானிலை கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துதல், அடிப்படை அளவிலான வானிலை முன்னறிவிப்பு, இமாச்சலப் பிரதேச மாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பின்போது இமாச்சலப் பிரதேசத்திற்கு ஐந்து டாப்ளர் வானிலை கண்காணிப்பு ரேடார்களை அளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறினார். அத்துடன் மாநிலத்தின் வானிலை கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308326®=3&lang=1
****
TV/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308454)
வருகையாளர் எண்ணிக்கை : 9