சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான தற்காலிக நிறைவுச் சான்றிதழ்: விதிமுறைகளை கடுமையாக்கிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 4:47PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் மத்திய பகுதி, சாலையோரங்கள் ஆகியவற்றில் மரம் வளர்ப்பது குறித்த ஒப்பந்தக் கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றுவதை உறுதி செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மரம் வளர்ப்பு, நிலப்பரப்பு மேம்பாடு ஆகியவற்றைத் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, ஒட்டுமொத்த திட்ட நிறைவின் ஒருங்கிணைந்த அம்சங்களாகக் கட்டாயமாக்குகின்றன.
புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பசுமை நெடுஞ்சாலைக் கொள்கை 2015, ஐஆர்சி:எஸ்பி:21-2009, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட இதர தொடர்புடைய விதிமுறைகளின் அடிப்படையில், ஒப்பந்தம், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு ஏற்ப மரம் வளர்ப்புப் பணிகள் நடைபெறுவதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதி செய்யும்.
இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்களில் ஒன்று, தற்காலிக நிறைவுச் சான்றிதழை அளிப்பதற்கான குறைந்தபட்ச அளவுகோலை அறிமுகப்படுத்துவதாகும். மரம் வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் குறைந்தது 80 சதவீத பரப்பளவில் மரம் வளர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அப்பணிகள் விதிமுறைக்குட்பட்டதாகக் கருதப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308320®=3&lang=1
****
TV/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308446)
வருகையாளர் எண்ணிக்கை : 10