புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச கடல்சார் ஆணையம், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் கொச்சியில் உள்ள கடல்சார் உயிர் வளங்கள், சூழலியல் மையத்தில், சர்வதேச ஆழ்கடல் பயிற்சி முகாம் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 3:15PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ்கொச்சியில் உள்ள கடல்சார் உயிர்  வளங்கள்சூழலியல் மையத்தில்ஐந்து நாட்கள் நடைபெறும் ஆழ்கடல் மேக்ரோஃபானா வகைப்பாட்டியல் பயிற்சி முகாம்பல்லுயிர் மதிப்பீடுகளுக்கான வழிமுறைகளை தரப்படுத்துதல் என்ற நிகழ்ச்சித் தொடங்கியுள்ளது.

2026 செப்டம்பர் 07 முதல் 11 வரை நடைபெறும் இந்த முக்கிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்சர்வதேச கடல்சார் ஆணையத்தின் நீடித்த கடல்சார் அறிவு குறித்த முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகதின் கீழ் செயல்பட்டு வரும் கடல்சார் உயிர் வளங்கள்சூழலியல் மையத்தில்சர்வதேச கடல்சார் ஆணையம்இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள நாடுகளின்  கூட்டமைப்புகொரியாவின் தேசிய கடல்சார் பல்லுயிர் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்தப் பயிற்சித் திட்டம் அமைந்துள்ளது.

இந்தப் பயிலரங்கின் தொடக்க விழாவில் பேசிய சர்வதேச கடல்சார் ஆணையத்தின் பொதுச் செயலாளர் திருமதி லெடிசியா கார்வலோஆழ்கடல் பகுதியின் முறையான சுற்றுச்சூழல் மேலாண்மைக்குத் தேவையான அறிவியல் அறிவுவகைப்பாட்டியல் நிபுணத்துவத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்உறுப்பு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச ஒத்துழைப்புதரப்படுத்தப்பட்ட அறிவியல் அணுகுமுறைகளின் பங்களிப்பு குறித்து அவர் சுட்டிக்காட்டினார்இளம் ஆராய்ச்சியாளர்கள்சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும்போது அறிவியல் சிறப்பம்சம்விடாமுயற்சி,  தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308250&reg=3&lang=1

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308429) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी