ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேதம், முழுமையான சுகாதாரப் பராமரிப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த, ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம், ஹார்ட்ஃபுல்னஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 12:05PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், ஜாம்நகரில் அமைந்துள்ள 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுர்வேதக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் உள்ள ஹார்ட்ஃபுல்னஸ் நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு கால புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆயுர்வேதக் கல்வி, மருத்துவப் பயிற்சி, ஆராய்ச்சியில் ஆயுர்வேதக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் வலிமை, தியானம், யோகா, வாழ்வியல் முறைப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த முன் முயற்சிகளில், ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம் நோய்த்தடுப்பு, முழுமையான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.

கன்ஹா சாந்தி வனத்தில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், இந்த ஒத்துழைப்பு குறித்த அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இக்கூட்டத்தில், மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், பத்ம பூஷன் தாஜி, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ஸ்ரீனிவாஸ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பத்மஸ்ரீ வைத்யா ராஜேஷ் கோடேச்சா, நிதி ஆயோக், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.inPressReleaseDetail.aspxPRID=2308151&reg=3&lang=1     

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2308269) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati