சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய ஷெட்டில்யூடு வகுப்பினர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானாவுக்கு “டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மக்கள் சேவை விருது 2026
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 7:09PM by PIB Chennai
தேசிய ஷெட்டில்யூடு வகுப்பினர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானாவுக்கு “டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மக்கள் சேவை விருது 2026” அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் பட்டியல் சமூகத்தினரின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆணையம் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.
பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதுக் குழுவினர் இந்த விருக்ககாக தேசிய பட்டியல் சமூக ஆணையத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். புதுதில்லியில் நடைபெற உள்ள 16-வது சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாவில் இந்த கவுரவம் அளிக்கப்படவுள்ளது.
கிஷோர் மக்வானாவின் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டுதலின் கீழ், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சமத்துவம், கண்ணியம் மற்றும் சமூக அதிகாரமளித்தலை உறுதி செய்வதிலும் ஆணையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேசத்தின் வளர்ச்சிக்கும் சமூக நீதிக்கும் ஆணையம் ஆற்றிய சேவைகளை நடுவர் குழு வெகுவாகப் பாராட்டியுள்ளது. இந்த விருது, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் ஆணையத்தின் தொடர் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307972®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308161)
வருகையாளர் எண்ணிக்கை : 6