பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 9:18PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அரசு முறைப் பயணமாக முதல் முறையாக இலங்கை சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இலங்கை எப்போது நெருக்கடியைச் சந்தித்தாலும் இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வலுவான கலாச்சார மற்றும் நாகரிக உறவுகள் இருப்பதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். நாட்டின் பொருளாதாரம் 2014-ல் இரு  டிரில்லியன் டாலராக இருந்தது, கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்காகி தற்போது சுமார் 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றார். தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி கண்டுள்ளதையும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாதனங்கள் மற்றும் கைப்பேசி உற்பத்தித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபாரமான வளர்ச்சியையும் அவர் எடுத்துரைத்தார். உலக அளவில் இரண்டாவது பெரிய கைப்பேசி தயாரிப்பு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதுடன், பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்திய பிரதமர் மோடியைப் வாழ்த்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பாகச் செயல்படும் இந்திய வம்சாவளியினரையும் அவர் வாழ்த்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308060&reg=3&lang=1

***

TV/VK/RJ  


(வெளியீட்டு அடையாள எண்: 2308160) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी