பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை தலைமைத் தளபதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 5:53PM by PIB Chennai

இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், நாளை (9 செப்டம்பர் 2026) முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியப் பயணத்தின் போது, அந்நாட்டு கடற்படை உள்பட பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளைச் சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடல்சார் பாதுகாப்பு, தகவல் பகிர்வு, பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படவுள்ளது. மேலும், முக்கிய செயல்பாட்டு மற்றும் பயிற்சி நிலையங்களையும் அவர் பார்வையிட உள்ளார்.

நியூசிலாந்து நாட்டில், அந்நாட்டு கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சமீபத்தில் கையெழுத்தான கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பயிற்சி நிலையங்களைப் பார்வையிடுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307917&reg=3&lang=1

***

TV/PD/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2308143) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी