மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வியும் எழுத்தறிவும் மக்களை வலிமைப்படுத்தவும், பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும் உதவ வேண்டும்: மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 8:05PM by PIB Chennai
கல்வியும், எழுத்தறிவும் மக்களை வலிமைப்படுத்தவும், பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும் உதவ வேண்டும் என்று மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளார்.
புதுதில்லியில் சர்வதேச எழுத்தறிவு நாள் 2026 விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. "மக்கள், பூமி மற்றும் வளமைக்கான எழுத்தறிவு" என்பது இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருளாகும்.
விழாவில் பேசிய மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, எழுத்தறிவை வெறும் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனுடன் சுருக்கிவிடாமல், நிதி அறிவு, டிஜிட்டல் கல்வி மற்றும் சுறுசுறுப்பான குடிமகனை உருவாக்கும் கருவியாக மாற்ற வேண்டும் என்றார். 'உல்லாஸ்' திட்டம் கற்போரின் தன்னம்பிக்கை மற்றும் கண்ணியத்தை உயர்த்துவதாக அவர் பாராட்டினார்.
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேசுகையில், தங்கள் மாநிலம் 95.6 சதவீத எழுத்தறிவு விகிதத்தை எட்டி முழுமையான எழுத்தறிவு இலக்கை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்தியாவை முழுமையான எழுத்தறிவு பெற்ற நாடாக மாற்றும் நோக்கில், செப்டம்பர் 1 முதல் 14 வரை நாடு முழுவதும் 'எழுத்தறிவுப் பதினைந்து நாட்கள்' விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308010®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308080)
வருகையாளர் எண்ணிக்கை : 9