விவசாயத்துறை அமைச்சகம்
காரீஃப் பருவத்தில் 1086.31 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 2:22PM by PIB Chennai
நாடு முழுவதும் 2026 செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி காரீஃப் பருவத்தில் 1086.31 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பருப்பு வகைகள், சணல் மற்றும் மெஸ்தா ஆகியவற்றின் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள் 117.13 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும், சணல் மற்றும் மெஸ்தா 6.34 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளன. பருப்பு வகைகள் சாகுபடி உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் நெல் சாகுபடி 421.82 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஸ்ரீ அன்னா மற்றும் சிறுதானியங்கள் 181.39 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 191.99 லட்சம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கரும்பு சாகுபடி 58.47 லட்சம் ஹெக்டேராகவும், பருத்தி சாகுபடி 109.17 லட்சம் ஹெக்டேராகவும் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பருத்தி பயிரிடப்பட்ட பரப்பளவு குறைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307791®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307943)
வருகையாளர் எண்ணிக்கை : 19