நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

தூய்மையான போக்குவரத்துப் பயணத்திற்கான புதிய தளங்களைத் தொடங்கி வைத்தார் நிதி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 5:53PM by PIB Chennai

5-வது 'இ-ஃபாஸ்ட் இந்தியா உச்சிமாநாடு 2026'-ல் நிதி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா துவக்க உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, ​​தூய்மையான போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்கான தளம் (பிஏசிடி), பூஜ்ஜிய உமிழ்வு லாரி (இசட்இடி)  சந்தைத்தளம் ஆகியவற்றை அவர்  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியல் பேசிய திரு ராஜீவ் கௌபா, 2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியம் என்ற உலகளாவிய உறுதிமொழியை அடைவதற்கும், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் மின்சாரப் போக்குவரத்திற்கு மாறுவது அவசியம் என்று வலியுறுத்தினார். நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பிற்கும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவது இன்றியமையாதது என்று அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் சரக்கு போக்குவரத்தில் 70 சதவீதம் சாலை வழியாகவே நடைபெறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், 2025-ம் ஆண்டில் சுமார் 800 கனரக மின்சார லாரிகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்று குறிப்பிட்டார். இதன்மூலம் முக்கிய சரக்குப் போக்குவரத்து வழித்தடங்களில் மின்மயமாக்கலை உத்திசார்ந்த முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307575&reg=3&lang=1

***

TV/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2307755) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी