சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு, ஒரு புதிய தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 6:13PM by PIB Chennai
போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல்திட்டத்தின் (என்ஏபிடிடிஆர்) கீழ் வழங்கப்பட்ட ஆதரவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, நாகாலாந்தின் செமினியூ மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான கேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபட்டுத் தொடர்ந்து சீரான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் சுயதொழிலில் ஈடுபட்டு, சமூகத்துடன் மீண்டும் இணைந்து வருகிறார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் தொடர்ச்சியான மறுவாழ்வு நடவடிக்கைகள், குடும்பத்தின் பங்களிப்பு, சமூகத்தின் ஆதரவு ஆகியவை வகிக்கும் முக்கிய பங்கை இவரது பயணம் பிரதிபலிக்கிறது.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரும், நடுநிலைப் பள்ளி வரை கல்வி பயின்றவருமான கேரி, போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். உணர்வுரீதியான மன அழுத்தம், சரியான வழிகாட்டுதல் இன்மை, தவறான நண்பர்களின் தாக்கம் ஆகியவை அவரை நாளடைவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்கியது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கல்வி, சமூக உறவுகள், எதிர்கால வாய்ப்புகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
குடும்பத்தினர், சமூகத் தலைவர்கள், செமினியுவில் உள்ள மாவட்ட போதை மீட்பு மையத்தின் ஆதரவுடன், கேரி படிப்படியாக மறுவாழ்வு மற்றும் மீட்புக்கான உதவிகளை ஏற்றுக்கொண்டார். என்ஏபிடிடிஆர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், அவருக்குப் பாதுகாப்பான, ஆதரவான சூழலையும், உணர்வுப்பூர்வமான வழிகாட்டுதலையும், அத்துடன் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பதற்கான ஊக்கத்தையும் வழங்கின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307588®=3&lang=1
***
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2307736)
வருகையாளர் எண்ணிக்கை : 18