சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நிதி நெருக்கடியிலிருந்து முனைவர் பட்டம் வரை: உயர்கல்வியின் பாதையில் மணிகா மண்டலின் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 5:51PM by PIB Chennai
பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகை (என்எஃப்எஸ்சி) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆதரவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 33 வயதான ஆய்வாளர் திருமதி மணிகா மண்டல், நிதி நெருக்கடி, குறைந்த அளவிலான கல்வி வளங்களுக்கு மத்தியிலும் தனது முனைவர் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். பொருளாதார, சமூகத் தடைகளைத் தகர்த்து ஆய்வாளர்கள் முன்னேறுவதற்கு இத்தகைய உதவித் தொகை எவ்வாறு ஆதரவளிக்கின்றன என்பதை இவரது பயணம் பிரதிபலிக்கிறது.
ஏப்ரல் 2017-ல், திருமதி மணிகா என்எஃப்எஸ்சி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையைப் பெறத் தொடங்கினார். அவர் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையைப் பெற்றார். இது, அவரது முனைவர் பட்டப் படிப்புக்கும், ஆராய்ச்சிப் பணிகளுக்கும் துணையாக அமைந்ததுடன், அவரது முன்னேற்றத்தைத் தடைசெய்திருந்த நிதிச் சிக்கல்கள், கல்விசார் வளங்களின் பற்றாக்குறை ஆகியவற்றைச் சமாளிக்கவும் உதவியது.
இந்த உதவித்தொகை, அவரது குடும்பத்தின் மீது இருந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி சார்ந்த செலவுகளின் சுமையைக் குறைத்தது. இது அவரது முனைவர் பட்டப் படிப்பைத் தொடரத் தேவையான நிதி நிலைத்தன்மையை வழங்கியதுடன், தனது நீண்டகாலக் கல்விசார் இலக்குகளில் அவர் கவனம் செலுத்தவும் உதவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307571®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2307693)
வருகையாளர் எண்ணிக்கை : 7