சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி தேசிய விலங்கியல் பூங்காவில் ஞாயிறு தோறும் பறவை, வண்ணத்துப்பூச்சி, தட்டான் நடைப்பயணங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 7:16PM by PIB Chennai

பறவைகள், பட்டாம்பூச்சிகள், தட்டான்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா, மூன்றாவது பட்டாம்பூச்சி, தட்டான் நடைப்பயணத்தையும், 13-வது பறவைகள் நடைப்பயணத்தையும் இன்று (06.09.2026) நடத்தியதுபட்டாம்பூச்சி, தட்டான் நிபுணர்களான திரு சஞ்சய் திவாரி, திரு சி பி மௌரியா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழும், தன்னார்வலர்களின் உதவியுடனும் இந்த நடைப்பயணங்கள் இன்று காலை 6:45 மணி முதல் 10:30 மணி வரை நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பறவை, வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள், மாணவர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், பல்லுயிர் பாதுகாப்பில் ஆர்வமுள்ளோர் ஆகியோரிடமிருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இந்த நடைப்பயணங்களில் மொத்தம் 16 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேசிய விலங்கியல் பூங்காவின் இயக்குநர், விலங்கியல் பூங்கா அதிகாரிகள் கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டி அவர்களுடன் கலந்துரையாடினர். இந்த நடைப்பயணங்களின் போது, ​​பங்கேற்பாளர்கள் 700-க்கும் மேற்பட்ட பறவைகளைக் கவனித்து, 44 பறவை இனங்களையும், அத்துடன் நடைப்பயணப் பகுதியில் தலா 4 வண்ணத்துப்பூச்சி இனங்கள், ஒரு தட்டான், ஒரு ஊசித் தட்டான் இனத்தையும் ஆவணப்படுத்தினர். பறவைகள் நடைப்பயணத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, 300-க்கும் மேற்பட்ட வண்ண நாரைகள் காணப்பட்டன.

பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய தேசிய விலங்கியல் பூங்காவின் இயக்குநர் டாக்டர் சஞ்சீத் குமார், இதுபோன்ற இயற்கை நடைப்பயணங்கள், களத்தில் உயிரினங்களை அடையாளம் காணும் திறன்களை வலுப்படுத்தவும், புரிதலை மேம்படுத்தவும், பல்லுயிர் ஆவணப்படுத்தலுக்குப் பங்களிக்கவும் வாய்ப்புகளை வழங்குகின்றன என்று எடுத்துரைத்தார்.

அடுத்த இயற்கை நடைப்பயணங்கள் 2026 செப்டம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307211&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307230) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी