நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபின் மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி விநியோகம் மத்திய அரசு விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 2:37PM by PIB Chennai

பஞ்சாபின் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்ததற்கு, மத்திய அரசிடமிருந்து போதுமான நிலக்கரி விநியோகம் இல்லாததே காரணம் என சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அவை உண்மையான தகவல் அல்ல என மத்திய நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.

பஞ்சாபின் மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சாப் மாநிலம் உட்பட நாடு முழுவதும் மின் உற்பத்திக்குத் தடையற்ற நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதில் கோல் இந்தியா லிமிடெட் உறுதியுடன் உள்ளது என்றும் நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

கோல் இந்தியாவின் துணை நிறுவனங்கள் பஞ்சாபில் உள்ள மின் உற்பத்தியாளர்களுக்கு நிலக்கரியை விரைந்து வழங்கியுள்ளன. நிலக்கரி விநியோகம் தொடர்பாக, மத்திய அரசு ஏற்கெனவே உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307134&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307184) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu