இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு – சூரத்தில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 2:07PM by PIB Chennai

ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக, விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் என பல தரப்பினரை ஒன்றிணைக்கும் 'வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான போதை இல்லாத இளைஞர் சமுதாயம்' என்ற கருப்பொருளுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 89-வது பதிப்பு இன்று சூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி ஆகியோர், பங்கேற்பாளர்களுடன் இணைந்து, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான தங்களின் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

சூரத்தில் சர்தார் படேல் சிலை அருகே அதிகாலையில் இந்த மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு தொடங்கியது. நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மாண்டவியா, வளர்ந்த நாட்டிற்கு ஆரோக்கியமான மக்கள் தொகை அவசியம் எனவும் மிதிவண்டிப் பயணம் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்குப் பங்களிக்கிறது என்றும் கூறினார்.

இதற்கிடையில், தேசிய தலைநகரான புதுதில்லியில், இந்த நிகழ்வு ஆசிரியர் தின சிறப்பு கருப்பொருளுடன் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307126&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307152) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati