சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதி வழங்கலில் ரூ.200 கோடியைக் கடந்த தேசிய பல்லுயிர் ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 6:33PM by PIB Chennai
இந்தியாவின் அணுகல் மற்றும் பயன் பகிர்வு கட்டமைப்பைச் செயல்படுத்துவதில், தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.200 கோடிக்கும் அதிகமான மொத்த ஏபிஎஸ் நிதி ஒதுக்கீட்டை எட்டி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் படைத்துள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, பாகற்காய், வெண்டைக்காய், மிளகாய், வெங்காயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியல் வளங்களை அணுகுதல் மற்றும் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் ஏபிஎஸ் வருவாயாக, 27 மாநிலப் பல்லுயிர் வாரியங்களுக்கும், 5 யூனியன் பிரதேசப் பல்லுயிர் மன்றங்களுக்கும் ரூ.8.23 கோடியை ஆணையம் அனுமதித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக இந்த உயிரியல் வளங்களை அணுகுவது தொடர்பாகத் தனியார் விதை நிறுவனங்களிடமிருந்து இந்த ஏபிஎஸ் வருமானம் பெறப்பட்டுள்ளது.
உயிரியல் வளங்கள் திறந்த சந்தை மூலமாகவோ அல்லது வர்த்தகர்கள் மூலமாகவோ பெறப்பட்டதால், அவற்றை ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட விவசாயி, சமூகம் அல்லது புவியியல் பகுதியுடன் நேரடியாகத் தொடர்புபடுத்த இயலவில்லை. அதற்கேற்ப, நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைப்படி, அந்தந்தப் பயிர்கள் பயிரிடப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேளாண்மைக் கழகங்களுக்கு இடையே இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மத்திய வேளாண் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சாகுபடிப் பரப்பளவின் தரவுகளின் அடிப்படையில் இந்த விநியோகம் செய்யப்படுகிறது. ஏபிஎஸ் வருவாயைப் பெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், விவாதிக்கப்பட்ட நான்கு பயிர்களிலும் மத்தியப் பிரதேசமும் மகாராஷ்டிராவும் ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய நிதி பெறுநர்களாக உருவெடுத்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்தக் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307004®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307028)
வருகையாளர் எண்ணிக்கை : 10