பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 5:38PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துச் சமூக ஊடகமான 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்றும், வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான அடித்தளம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் நமது ஆசிரியர்கள் மிக முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றைப் பேணுவதற்கும், இந்த உன்னதப் பொறுப்பில் ஆசிரியர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தக் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306982&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307025) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati