அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஐஐடி கரக்பூரில் குறைந்த செலவிலான சுகாதாரப் பாதுகாப்புக்கான சிஆர்டிடிஎச் மையம் நிலைத்தன்மை கட்டத்தைத் தொடங்கி வைத்தார் டாக்டர் என். கலைசெல்வி
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 4:40PM by PIB Chennai
ஐஐடி கரக்பூரில் உள்ள குறைந்த செலவிலான சுகாதாரப் பாதுகாப்புக்கான பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் நிலைத்தன்மை கட்டத்தை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என். கலைசெல்வி ஐஐடி கரக்பூரில் உள்ள பென் குப்தா அரங்கத்தில் இன்று (05.09.2026) தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் திட்டத்தின் கீழ் 2019-ல் நிறுவப்பட்ட இம்மையம், தனது ஆரம்பகட்ட மானிய ஆதரவுக் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, தற்போது ஒரு நிலையான கட்டத்திற்கு மாறியுள்ளது. மலிவு விலை சுகாதாரத் தொழில்நுட்ப மேம்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு தன்னிறைவு பெற்ற தேசிய மையமாக இது தற்போது செயல்படுகிறது. இந்த மையம் தனது செயல்பாட்டுச் செலவுகளைப் பயனர் கட்டணங்கள், தொழில்துறை நிதியுதவிகள் மற்றும் கூட்டாண்மை ஒத்துழைப்புகள் ஆகியவை மூலம் ஈடுசெய்வதோடு, கண்டுபிடிப்பாளர்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும் இம்மையம், சுகாதாரத் தீர்வுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306939®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307018)
வருகையாளர் எண்ணிக்கை : 13