நிலக்கரி அமைச்சகம்
கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தியும் விநியோகமும் அதிகரிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 4:38PM by PIB Chennai
நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை தணிவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதால், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும் விநியோகமும் வேகம் பெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில் அவை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொடர் மழை பெய்தபோதிலும், சிஐஎல் நிறுவனம் சீரான விநியோகத்தைப் பராமரித்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், சிஐஎல் நிறுவனம் 322.90 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விநியோகிக்கப்பட்ட 302.60 மில்லியன் டன்னை விட 6.70% அதிகமாகும்.
தணிந்துவரும் மழைப்பொழிவு ஏற்கனவே உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரித்து வருகிறது. நீண்டகால மழையின் காரணமாக ஈரமாகியிருந்த நிலக்கரிப் படுகைகள் தற்போது உலர்ந்து வருவதால், புதிதாக வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியைத் தடையின்றி இடமாற்றம் செய்வதும் கையாள்வதும் எளிதாகியுள்ளது.
வறண்ட காலநிலை நிலவுவதால், வரும் நாட்களில் நிலக்கரி விநியோகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதை உறுதிசெய்ய, உரிய தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306938®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307016)
வருகையாளர் எண்ணிக்கை : 5