நிலக்கரி அமைச்சகம்
ஈசிஎல் நிறுவனம் சார்பில் சிறப்பு இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2026 5:27PM by PIB Chennai
ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனப்படும் ஈசிஎல் நிறுவனம், பணியிடத் தூய்மையை மேம்படுத்துதல், நிலைத்தன்மையை ஊக்குவித்தல், நிறுவனம் முழுவதும் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், சிறப்பு இயக்கம் 6.0-ஐ நடத்துகிறது.
இந்த இயக்கமானது, இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. ஆயத்தக் கட்டம் 2026 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30, வரையிலும், அதனைத் தொடர்ந்து செயலாக்கக் கட்டம் 2026 அக்டோபர் 2 முதல் 2026 அக்டோபர் 31, வரையிலும் மேற்கொள்ளப்படும்.
இந்த இயக்கத்தை ஈசிஎல் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் திரு சதீஷ் ஜா முறைப்படி தொடங்கி வைத்து செப்டம்பர் 15-ல் பணிகளின் தொடக்கத்திற்கு அவர் ஒப்புதல் அளித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜா, சிறப்புப் பிரச்சாரம் 6.0-ன் நோக்கங்களை அடைவதில் ஒருங்கிணைந்த பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306736®=3&lang=1
----
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306807)
வருகையாளர் எண்ணிக்கை : 12